ETV Bharat / state

டுமீல் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் வெட்டிக்கொலை - chennai district news

சென்னை பிரசிடென்சி கல்லூரி மைதானம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai murder issue
chennai murder issue
author img

By

Published : Aug 3, 2021, 6:37 AM IST

சென்னை: பிரசிடென்சி கல்லூரி மைதானத்தின் அருகே உள்ள புல் புதரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் பணியாளர் இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின்பேரில் விரைந்துசென்ற காவல் துறையினர் முள்புதரில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்த நபரை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் உயிரிழந்த நபர் மயிலாப்பூர் டுமீல் குப்பம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (27) எனத் தெரியவந்தது. மேலும் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்ததால் யாராவது கொலை செய்து வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.