சென்னையில் இருந்து மும்பைக்கு காலை 5:00 மணிக்கு தனியார் விமானம் புறப்பட இருந்தது. 213 பயணிகள் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தனர். விமானி இல்லாத நிலையில், சுமார் 8 மணி நேரத்திற்குமேல் விமானம் புறப்பட தாமதம் ஆனது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமானத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, பிற்பகல் 1.20 மணிக்கு விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.

இதுதொடர்பாக விமான நிலைய அலுவலர்களிடமும் பயணிகள் புகாா் செய்துள்ளனா்.
தனியார் விமான நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிய சம்பவம் பிற விமானங்களில் செல்ல இருந்த பயணிகளிடையேயும் முகச்சுழிவை ஏற்படுத்தியது.
