ETV Bharat / state

அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்.. என்ன காரணம்? - Chennai Mother Teresa University students Protest

Mother Teresa University Students Protest: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 11:48 AM IST

சென்னை: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, அக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் அன்னை தெரேசா மகளிர் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எனவே இங்கு, எம்.காம் (M.Com), எம்.பி.ஏ (MBA) உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிக்கும் முதுகலை படிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த முதுகலை படிப்பில் சேரும் மாணவிகள், விருப்பப்பட்டால் மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னர் வெளியே செல்லலாம் எனவும் அந்த மூன்று ஆண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் சொல்லி கல்லூரிகளில் மாணவிகளை சேர்த்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது, ஐந்தாண்டுகள் முடித்தால் மட்டுமே முதுகலை பட்டப் படிப்புக்கான சான்று கொடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கூறுவதாக மாணவிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள் இல்லை எனவும், தேர்வு எழுதி மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை மதிப்பெண் பட்டியல் வழங்கவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் எ.வ.வேலு பேட்டி!

தொடர்ந்து, இது குறித்து நான்கு மாதங்களாக கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

அதுமட்டுமின்றி, 200க்கும் அதிகமான மாணவிகள் படிக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் ஒரு கழிவறை மட்டுமே இருப்பதால், பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருவதாக மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கல்லூரியில் சேரும் பொழுது நிர்வாகம் அளித்த வாக்குறுதியின் படி மூன்று ஆண்டுக்கான சான்றிதழை கல்லூரி நிர்வாகம் வழங்கினால் மட்டுமே தாங்கள் இந்த போராட்டத்தை கைவிடுவோம் என மாணவிகள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பெண்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.