சென்னை ஆதம்பாக்கம், சுரேந்தர் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது 14 வயது மகள் வீட்டில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு நேற்று (செப்.14) மாலை வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இது குறித்து குமரேசன் காணாமல் போன மகளைக் கண்டிபிடித்து தரக்கோரி மாலை 7 மணியளவில் ஆதம்பாக்கம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமியின் புகைப்படம், அங்க அடையாளங்கள், உடையின் நிறங்களை அனைத்தும் காவல் துறையினரின் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் அனுப்பி தேடுதல் பணியைத் தொடங்கினார்.
வாட்ஸ் ஆப்பில் புகைப்படத்தைப் பார்த்த வடபழனி காவல் துறையினர் ஸ்கேன் சென்டர் அருகே சிறுமி நின்று கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்தனர்.
பின்னர் அங்கு சென்ற ஆதம்பாக்கம் காவல் துறையினர் சிறுமியை மீட்டு இரவு 10 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மகளைக் கண்டுபிடித்து கொடுத்த காவல் துறையினருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், துரிதமாகச் செயல்பட்டு மூன்று மணி நேரத்தில் சிறுமியை மீட்டு பெற்றோருடன் ஒப்படைத்த காவல் துறையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார்.