ETV Bharat / state

எல்போர்டு உதயநிதி, முந்திரிக்கொட்டை மு.க. ஸ்டாலின் - ஜெயக்குமார் - Chennai Udayanidhi, Stalin news

சென்னை: டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் திமுகவைச் சேர்ந்த ஐயப்பன் கைது செய்யப்பட்டதற்கு எல்போர்டு உதயநிதி, முந்திரிக்கொட்டை மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Feb 10, 2020, 2:38 PM IST

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து உள்ளார். விவசாயிகள் மட்டுமின்றி தமிழ்நாடு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் எடிப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் வயிற்றில் புளியை கரைக்கிறது" என்றார்.

மேலும், முதலமைச்சர் அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பணிகளை தொடர்ச்சியாக செய்ய டெல்லிக்கு செல்கிறேன். வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ள விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும். மேலும், மக்களை பாதிக்காத வகையில் பணிகள் நடக்கும் எனவும் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார்

தொடர்ந்து பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் ஐயப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரசில் இருந்து திமுக சென்று திமுகவின் பிரசார பிரங்கியாக உள்ள அப்பாவுவின் கூட்டாளி தான் ஐயப்பன். இதற்கு அப்பாவு, எல்போர்டு உதயநிதி, முந்திரிக்கொட்டை மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்

Intro:சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். விவசாயிகள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டு உள்ளார். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் வயிற்றில் புளியை கரைக்கிறது. முதல்-அமைச்சர் அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பணிகளை தொடர்ச்சியாக செய்ய டெல்லிக்கு செல்கிறேன்.

தொழிற்சாலைகளால் வேலை வாய்ப்பு உருவாகும்.வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் நடக்கும்.

டி.என்.எஸ்.பி. தேர்வு முறைகேடு வழக்கில் ஐயப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரசில் இருந்து திமுக சென்று திமுகவின் பிரசார பிரங்கியாக உள்ள அப்பாவுவின் கூட்டாளி தான் ஐயப்பன். இதற்கு அப்பாவு என்ன பதிலளிக்க போகிறார். திமுக ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்ட பார்தினி செடிகள். அன்றைக்கு செய்யப்பட்டதை இன்றைக்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகிறோம். எதிர்காலத்தில் எந்த ஒரு சிறு தவறும் நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எல் போர்டு உதயநிதி அவரது தந்தை முந்திரிக்கொட்டை ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார்கள். அப்பாவி போல் இருக்கும் தயாநிதி மாறன் என்ன சொல்ல போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.