சென்னை வண்ணாரப்பேட்டையில் ரேஷன் பொருட்களை ஏற்றிவந்த மினி லாரியும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மினி லாரியில் உள்ள ரேஷன் பொருட்கள் ஆட்டோ மீது விழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையறிந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். துரித நடவடிக்கையால் விபத்துக்குள்ளான மினி லாரியில் இருந்த ரேஷன் பொருட்கள் மீட்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் சாலையில் போக்குவரத்து சீராகி விபத்து நடந்த பகுதியும் சகஜ நிலைக்கு திரும்பியது.
இதையும் படிங்க: டிஎஸ்பி முதல் உளவுத்துறை ஐஜி வரை... யார் இந்த ஈஸ்வரமூர்த்தி?