சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த 7 வயதுக் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த மோயாமோயா என்ற அரிதான நோய்க்கு மூளையில் பைபாஸ் (மூளையில் மறுநாளப் பெருக்கம்) சிகிச்சையைச் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் செய்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த பக்கவாதம் மற்றும் வலிப்புத்தாக்க நிகழ்வுகள் பலமுறைகள் ஏற்பட்டதற்குப் பின்னர், 2023 செப்டம்பர் மாதத்தில் நீண்ட காலமாக உணர்விழந்த நிலையிலிருந்த சிறுமியை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நரம்பியல் அறுவைசிகிச்சை மையத்தின் இயக்குநர் ரூபேஷ் குமார் மற்றும் அத்துறையின் மருத்துவர்கள் குழு இச்சிறுமிக்கு மூளையில் ஆஞ்சியோகிராம் சோதனையைச் செய்தது. அதன் மூலம் மோயாமோயா நோய் பாதித்து உள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பெரும்பாலும் குழந்தைகளிடம் அடையாளம் காணப்படும் மோயாமோயா நோய்களுக்கான அறிகுறியாக, மூளையிலுள்ள ரத்தநாளங்கள் சுருங்கி, குறுகலாகவும் மற்றும் இரத்த ஓட்டம் தடைப்பட்டதாகவும் இருக்கும். மோயாமோயா என்ற ஜப்பானிய வார்த்தைக்குப் புகை மூட்டம் எனப் பொருள் கொள்ளலாம். இரத்தநாளங்கள் அடைபட்டிருக்கும் நிலையில் அவற்றிற்கு மாற்றாக, சிறு நாளங்கள் தோன்றுவதை இது குறிப்பிடுகிறது.
இந்த பாதிப்புடைய நோயாளிகளுக்குச் சிறிய பக்கவாத (ஸ்ட்ரோக்) தாக்குதல், ரத்தநாளம் பலூன் போல விரிவடையும் நிலை அல்லது மூளையில் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படுவதற்கான இடர் வாய்ப்புகள் அதிகமிருக்கும். மூளையின் இயக்கத்தை இது பாதிக்கும். அறிவுத்திறன் மற்றும் வளர்ச்சி தாமதங்களை அல்லது திறனிழப்புகளை குழந்தைகளிடம் விளைவிக்கும்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் நரம்பியல் அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநர் ரூபேஷ் குமார் மற்றும் சிறப்பு மருத்துவர் குழு இச்சிறுமிக்கு மூளையில் இரத்த ஓட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்காக மூளையில் பைபாஸ் அறுவை சிகிச்சையைச் செய்திருக்கிறது. இச்சிறுமியின் ரத்தநாளங்கள் 1 மி.மீட்டருக்கும் குறைவானதாக இருந்ததால், இந்த மூளை அறுவை சிகிச்சை மிகக் கடினமானதாக இருந்தது. எனினும், சிறு இரத்த நாளங்களுக்கு
இணைப்பு நிலையை உருவாக்கிய மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரித்திருக்கும் இந்த பைபாஸ் சிகிச்சை.
இந்த அறுவை சிகிச்சை குறித்துப் பேசிய, எம்ஜிஎம் ஹெல்த்கேர் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை மையத்தின் இயக்குநர் ரூபேஷ் குமார், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது இச்சிறுமி உணர்விழந்த நிலையில் இருந்தாள். இச்சிறுமிக்கு இருபக்கங்களிலும் மோயாமோயா நோய்க்குறி இருப்பதையும், அவளின் மூளையின் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டதற்கு அதிலுள்ள இரத்த நாளங்கள் வழக்கத்திற்கு மாறாகச் சுருங்கி, குறுகிய நிலையில் இருப்பதையும் மருத்துவர்கள் குழு கண்டறிந்தது. மூன்று நாட்களாக இக்குழந்தை, கண்ணை விழிக்க இயலாமல், தூக்கக் கலக்கத்தோடே இருந்தது. அதன்பிறகு, உணர்விழந்த நிலைக்குச் சென்றது.
எனவே, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்குக் கூடிய விரைவில் மூளையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தோம். இப்போது முற்றிலும் குணமடைந்திருக்கிறாள். கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில், மிகவும் துடிப்பாகவும், உற்சாகமாகவும் அவள் செயல்படுகிறார் என மருத்துவமனை சார்பாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!