ETV Bharat / state

கழிவுநீர் இணைப்பு பெற தொலைபேசி எண் அறிமுகம் - Chennai Metropolitan Water Board

சென்னை: மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் கழிவுநீர் இணைப்பு வசதியைப் பெற மாநகராட்சி நிர்வாகம் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

water
water
author img

By

Published : Jan 6, 2020, 11:31 PM IST

சென்னை மாநகராட்சி பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் கழிவுநீர் இணைப்பு பெற்றிட 'அழைத்தால் இணைப்பு', 'இல்லந்தோறும் இணைப்பு' என்ற இரண்டு புதிய திட்டங்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜி+1, ஜி+3, ஸ்டில்ட் + 3 ஆகிய தளம் வரையுள்ள கட்டடங்களுக்கு கழிவுநீர் இணைப்பு பெற, 044-45674567 என்ற தொலைபேசி மூலமாகவோ, சென்னை குடிநீர் வாரிய இணையதளம் மூலமாகவோ நேரிலோ பதிவு செய்தவுடன் எவ்வித ஆவணங்களுமின்றி எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.

இத்திட்டங்கள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை முழுமையாக அல்லது தவணை முறையில் எளிதாகச் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டங்களினால், 15 நாள்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படும், இணைப்புகள் கொடுத்த 24 மணி நேரத்தில் சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொந்தக் கட்சி கவுன்சிலரையே கடத்த முயன்ற அதிமுகவினர்!

Intro:Body:சென்னை - 06.01.20

அழைத்தால் இணைப்பு, இல்லந்தோறும் இணைப்பு... சென்னை மாநகராட்சியின் புதிய அணுகுமுறை.....

சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டத்தின்படி, 'அழைத்தால் இணைப்பு' திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜி+1, ஜி+3 மற்றும் ஸ்டில்ட் + 3 கழிவுநீர் இணைப்பு பெற 044-45674567 என்ற எண்ணில் அல்லது இணைததளம் மூலம் பதிவு செய்தால் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு திட்டமான, ' இல்லந்தோறும் இணைப்பு' திட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பாதாள சாக்கடை அமைப்புகள் உருவாக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் சென்று ஜி+1, ஜி+3 மற்றும் ஸ்டில்ட் + 3 வரை தரை தளம் வரையிலும் தாமாகவே முன் வந்து கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தித் தருகிறார்கள். இத்திட்டங்கள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை முழுமையாக அல்லது தவணை முறையில் எளிதாக செலுத்த வாய்ப்பு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்களினால், 15 நாட்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படும், இணைப்புகள் கொடுத்த 24 மணி நேரத்தில் சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

tn_che_06_drainage_connection_in_door_steps_corporation_new_idea_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.