ETV Bharat / state

Chennai Metro: மெட்ரோ பயணியா நீங்கள்? உங்களுக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கொடுத்த அப்டேட்!

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரை, தனியார் வாகன இணைப்பு சேவை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தொடக்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 2, 2023, 8:15 PM IST

சென்னை: மெட்ரோ ரயில் திட்டம், சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பச்சை மற்றும் நீல என இரண்டு வழித்தடங்கள் வாயிலாக 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல் விம்கோ நகர், திருவொற்றியூர், சென்னை சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மற்றும் ஒரு வழித்தடமும் உள்ளது.

இந்த மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சென்னை நகரில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளாக, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என 118.9 கி.மீ. தொலைவுக்கு மூன்று புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் 66 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துகொண்ட இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரை தனியார் வாகன இணைப்பு சேவை தனியார் வாகன நிறுவனமான பாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இனைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 2) அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: "சென்னையில் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களை இணைக்கும் வகையில் சிற்றுந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பைக் டாக்ஸி, மேலும் பெண்களுக்காக பைக் டாக்ஸி என உள்ளிட்ட இணைப்பு வாகன வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.

அதற்கு மெட்ரோ கனெக்ட் (Metro Connect) என்ற பெயரில் வாகன இணைப்பு வசதியை வழங்கி வருகிறோம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்துடன் இணைந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் முதல் போரூர் வரை, தனியார் வாகன இணைப்பு சேவையை தொடங்கியுள்ளது.

குளிரூட்டப்பட்ட (A/C) 18 இருக்கைகள் கொண்ட இரண்டு ஃபாஸ்ட் டிராக் வேன்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் இயங்கும்.

ஃபாஸ்ட் டிராக் மொபைல் அப்ளிகேஷன் மூலம் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பயணத்திற்கு ஒரு நபருக்கான கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

இதியும் படிங்க: Chennai Metro: 28 புதிய மெட்ரோ ரயில்கள் கொள்முதல் - தமிழக அரசு ஒப்புதல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.