சென்னை: இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் நாளை (நவ.03) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தென் தமிழகத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறன. மேலும், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் கிழக்குப் பகுதியில் கீழடுக்கு சுழற்சி, தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் சராசரியகா கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ வரை நீண்டுள்ளது. இது இலங்கை மற்றும் சுற்றுப்புறங்களில் கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ வரை பரவியுள்ளது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறன.
மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: நவம்பர் 4-ஆம் தேதி: தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 5-ஆம் தேதி: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 6-ஆம் தேதி: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 - 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
மழைப்பதிவு: கடந்த 24-மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, ராமநதி அணைப் பகுதி (தென்காசி) 9 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. இதேப்போல், காரைக்கால், ராமநாதபுரம் பகுதிகளில் தலா 8 செ.மீ.மழைப்பதிவாகி உள்ளது. மாஞ்சோலை, அருப்புக்கோட்டை, திருச்செந்தூர், ராமநாதபுரம் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நீலகிரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைப்பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.