ETV Bharat / state

குறைந்து வரும் மிக்ஜாம் தாக்கம்.. அடுத்த 5 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

Michaung cyclone: சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை படிப்படியா குறைந்து வரும் நிலையில், அடுத்த 5 நாட்களில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் மழை குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 11:57 AM IST

சென்னை: ஆந்திராவின் தெற்கே, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றும் அதை ஒட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் தீவிர புயலாக நேற்று (டிச.4) வலுப்பெற்று, சென்னையின் வடகிழக்கு பகுதியில் 90 கி.மீ தூரத்திலும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தென் கிழக்கே 170 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து வடகிழக்கே 200 கி.மீ தூரத்திலும், ஆந்திர மாநில பாப்டலாவில் இருந்து 300 கி.மீ மற்றும் மச்சிலிப்பட்டினம் பகுதியில் இருந்து தெற்கே 320 கி.மீ தொலைவிலும் நிலை பெற்றது.

மேலும், இந்த புயலானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளான நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் பகுதிகள், பாப்டலாவிற்கு அருகே மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றுடன், இன்று (டிச.5) கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அடுத்தடுத்த நாட்களின் வானிலை அறிக்கை: இன்று (டிச.5) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் இதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல், நாளை (டிச.6) முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இடி மின்னலுடன் கூடிய கனமழை: திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் வானிலை: அடுத்த 24 மணி நேரத்தில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக 25 முதல் 26 டிகிரியும், குறைந்த பட்சமாக 23 டிகிரி வரை இருக்கக் கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக 28 முதல் 29 டிகிரியும், குறைந்தபட்சமாக 23 டிகிரி வரையும் இருக்கக் கூடும்.

இதையும் படிங்க: படிப்படியாக குறையும் மிக்ஜாங் புயல் தாக்கம்.. சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.