ETV Bharat / state

மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை மையம் - etv bharat

பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்களுக்கு எச்சரிக்கை
author img

By

Published : Jul 26, 2021, 3:41 PM IST

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூலை 26: கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 27: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 28 முதல் 30 வரை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்)

பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம் (நீலகிரி) 16, தேவலா (நீலகிரி) 10, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 9, சின்னக்கல்லார் (கோவை), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 7, சோலையார் (கோவை) 6, ஏற்காடு (சேலம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), சோழவரம் (திருவள்ளூர்), வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை), வால்பாறை PAP (கோவை) 5, வால்பாறை PTO (கோவை), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 5, சின்கோனா (கோவை) 4, பொன்னேரி (திருவள்ளூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), குடவாசல் (திருவாரூர்), அவலாஞ்சி (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்), மேல் பவானி (நீலகிரி), தர்மபுரி PTO, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), மயிலம் AWS (விழுப்புரம்) தலா 3.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்

ஜூலை 26: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூலை 27 முதல் 28வரை: வடகிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூலை 29 முதல் 30வரை: வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

ஜூலை 26 முதல் 30வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசு என்றுதான் புத்தகங்களில் இருக்கும் - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.