மன்னார் வளைகுடா கடல்பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (டிசம்பர் 7) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (டிசம்பர் 8) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; மேலும் சென்னை, புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நகரின் ஒரு சிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; அதிகப்பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் எனவும்; அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்; நகரின் ஒரு சிலப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக தூத்துக்குடியில் 16 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாயூரநாதர் கோயில் சன்னதியில் மழைநீர் வெளியேறும் பாதை ஆக்கிரமிப்பு!