ETV Bharat / state

‘சென்னை மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்’ - சென்னை மேயர் பிரியா - மாநகராட்சி இதுவரைக்கும் எடுத்த நடவடிக்கை

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்க அறிவுறுத்தல்- சென்னை மேயர் பிரியா

author img

By

Published : Oct 12, 2022, 10:19 PM IST

சென்னை: பெரும் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட மோசமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக, வடிகால் பணிகள் முடிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை நகரம் தயாராக இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காண்போம்.

வடகிழக்கு பருவமழை: பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இருக்கும். இந்த ஆண்டு கணினி மாதிரி கணிப்பின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை , அக்டோபர் 4 வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளது எனவும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் (88 சதவீதம் முதல் 112 சதவீதம் வரை சராசரி மழை பெய்யக் கூடும்) ஆனால் இந்த பருவமழையில் 3 சூறாவளி புயல்கள் காணப்படும் எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை எதிர்கொள்ள சென்னை மழைநீர் வடிகால் தயார் ஆக வேண்டும்.

மழைநீர் வடிகால் பணி: பொதுவாக மழைநீர் வடிகால் பணி மூன்று பிரிவில் நடைபெற்று வருகிறது. அடையார் மற்றும் கூவம் பேசின்கோவளம், கொசஸ்தலையார் பேசின் என சுமார் 2,070 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆசிய வங்கி நிதி, பன்னாட்டு வங்கி நிதி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி என பல்வேறு வங்கி நிதி உதவி உடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் , ‘சிங்கார சென்னை- 2.0 திட்டம்’ பகுதி-1 மற்றும் 2ன் கீழ் 277.04 கோடி ரூபாய் மதிப்பில் 60.83 கி.மீ., நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் 295.73 கோடி ரூபாயில், 107.57 கி.மீ., நீளத்துக்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 27.21 கோடி ரூபாயில், 10 கி.மீ., நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் 8.26 கோடி ரூபாயில் 1.05 கி.மீ., நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் சிரமப்படுவது: மழைநீர் வடிகால் பணியால் மக்கள் பல்வேறு விதமாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வடிகால் பணி முடிக்காத காரணத்தினால் மழை பெய்யும் போது கழிவு நீருடன் மழைநீர் இணைந்து சாலைகளில் தேங்குகிறது. இதனால் மக்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர். மேலும் சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்படுகிறது. இதனால் சாலை ஓரத்தில் நடக்கமுடியாமல் சாலையில் பொது மக்கள் நடந்து செல்கின்றனர். சாலைகளும் இதனால் பாதிக்கப்படுகிறது.

முக்கிய பிரச்சனையாக பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக தென் சென்னை பகுதியில் இருக்கும் வேளச்சேரியில் காலை, மாலை நேரத்தில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடையாறு, திருவொற்றியூர், தி நகர், மாதவரம், ராயபுரம் பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில இடங்களில் வாகனங்கள் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்படும் குழியில் விழுந்து விடுகின்றது.

வல்லுநர் கருத்து: சென்னையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் குறித்து புவியியல் தகவல் அமைப்பு துறை வல்லுனரும் கட்டுமான பொறியாளருமான தயானந்த் கிருஷ்ணன் இடம் பேசிய போது, சென்ற ஆண்டுகளில் சென்னை மழைநீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் சென்னை போன்று பெரிய நகரங்களுக்கு முக்கியமாக தேவை அப்பொழுதுதான் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

மழைநீர் கால்வாயை விட்டு வெளியே வருவதற்கு முக்கியமான காரணம் கால்வாயின் அளவு சின்னதாக இருக்கும் அல்லது அதன் ஆழம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக கால்வாயை விட்டு மழை நீர் சாலைகளுக்கு வருகிறது எனவே மாநகராட்சி எந்தெந்த பகுதிகளில் மழை அதிகமாக பெய்கிறதோ அதற்கு ஏற்றவாறு கால்வாய்களை அமைக்க வேண்டும். மாநகராட்சி கடந்த ஆண்டு மழை நீர் வடிகால் வரைபடம் வெளியிட்டது அதில் அகலம் மற்றும் ஆழம் குறைவாக இருந்தது இதை சரி செய்தால் மட்டுமே வெள்ளம் வருவதை குறைக்க முடியும்.

தற்போது மாநகராட்சி மேற்கொண்டு வரும் மழைநீர் வடிகால் பணியில் அதிகப்படியான மழைநீர் வடிகால் இணைப்புகள் இல்லை என தெரிய வருகிறது. அதைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துக் கொண்டு மழை நீர் வடிகால் இணைப்புகளை இணைக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் பணி அமைப்பதற்கான ஒப்பந்தம் அளிக்கும் பொழுது அவர்களுக்கு அந்தப் பணியை செய்ய அனைத்து வசதிகளும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகு ஒப்பந்தத்தை அளிக்க வேண்டும். ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு ஒப்பந்தம் மட்டுமே வழங்க வேண்டும். இது போன்று வழங்கினால் மழைநீர் வடிகால் பணி விரைவில் முடியும் என தெரிவித்தார்.

மாநகராட்சி இதுவரைக்கும் எடுத்த நடவடிக்கை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் என 400க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் விரைந்து பணிகள் முடிக்க மாநகராட்சி அறிவுறித்தி உள்ளது. மேலும் மழைநீர் வடிகால் பணியில் இணைப்பு இல்லாத இடங்களில் வைக்க 719 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மேயர் பிரியா பதில்: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி பிரியா விடை கேள்வி கேட்ட பொழுது, "சென்னையில் நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிகளை பொறுத்தவரையில் பல்வேறு திட்டங்கள் மூலம் பணி நடைபெற்று வருகிறது. முக்கியமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. மீதமுள்ள மழை நீர் வடிகாலின் இணைப்பு பணிகளை வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இரவு பகலாக சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி தான் மிகவும் முக்கியமானது. கடந்த மழைக்காலத்தில் மழைநீர் தேங்கிய இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து அந்த இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.விரைவில் வடிகால் பணி முடிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்ப்புத்தாண்டு தையா...? சித்திரையா...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.