சென்னை பெரியமேடு சைடாம்ஸ் சாலை பகுதியில் வசித்துவருபவர் தவ்பீக் அகமத் (32). இவர் சொந்தமாக கார் டிராவல்ஸ் நடத்திவருகிறார். கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி இவரது நண்பர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தப்ரோஸ் ஆலம் என்பவரிடம் கார் ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார்.
வாடகைக்கு உண்டான தொகையையும் இரண்டு மாதங்களாக கொடுத்துவந்துள்ளார். பின்னர் கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் காருக்கான வாடகை தொகையை தப்ரோஸ் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் தவ்பிக் தனது காரை திருப்பி கேட்டுள்ளார், ஆனால் தப்ரோஸ் காரைத் தர மறுத்துள்ளார்.
இந்நிலையில் பொருள்கள் வாங்குவதற்காக தவ்பீக் தற்செயலாக ஓ.எல்.எக்.சில் ஆராய்ந்து கொண்டு இருக்கும்போது தப்ரோஸிடம் வாடகைக்கு விடப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் உடனே தவ்பீக் தனது காரை மீட்டுத் தரக்கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க... புதுச்சேரியில் தொடர் திருட்டு: சிசிடிவி கேமராவால் சிக்கிய இளைஞர்கள்!