ETV Bharat / state

Sexual Harassment Case: கல்லூரி காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை - பாலியல் வழக்கில் காவலாளிக்கு தண்டனை

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்ய முயற்சித்த கல்லூரி காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Sexual harassment case  ten years imprisonments to accused in Sexual harassment case  college student Sexual harassment case  chennai college student Sexual harassment by watchman  Mahila court ordered ten years imprisonments to accused in Sexual harassment case  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  பாலியல் வன்புணர்வு  கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை  பாலியல் வழக்கு  பாலியல் வழக்கில் காவலாளிக்கு தண்டனை  மாணவிக்கு பாலியல் வழக்கு
சிறை தண்டனை
author img

By

Published : Dec 3, 2021, 9:02 PM IST

சென்னை: அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர், கடந்த 2018ஆம் ஆண்டு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது மாணவி கூச்சலிட்டதால், அப்பெண்ணை கொலை செய்யவும் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டதுடன், காவலாளியை அடையாறு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, காவலாளியைக் கைது செய்தனர்.

பத்து ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு இன்று (டிசம்பர். 3) சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி இளம்பெண்ணிற்கு காவலாளி பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் வலுவாக இருப்பதாக எடுத்துரைத்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், காவலாளி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அபராதத் தொகையிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காரில் வந்து கவரிங் நகை பறித்த கும்பல்... அதிரடி கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.