சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நித்யா. இவரது வீட்டில் உள்ள உறை கிணற்றில் சென்னை மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கிணற்றில் கழிவு நீர் கலந்துள்ளது. கழிவு நீரை அகற்றுவதற்காக மதுரவாயலைச் சேர்ந்த ரவி (52), காசி (52) ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
நேற்று (பிப்.17) காலை முப்பது அடி ஆழம் கொண்ட உறை கிணற்றில் தேங்கியிருந்த கழிவு நீரை அகற்ற காசி கிணற்றில் இறங்கினார். அவரால் முடியாத நிலையில், ரவி கிணற்றில் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனையடுத்து, மதுரவாயல் தீயணைப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு காவல்துறை கிணற்றுக்குள் மயங்கி கிடந்த ரவியை சடலமாக மீட்டனர். பின்னர் இறந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர். ரவியை மீட்க கிணற்றில் இறங்கிய தொழிலாளி காசி அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை