சென்னை:சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பா தெருவை சேர்ந்தவர் அஸ்கர்ஷேக்(48). இவர் அதே பகுதியை சேர்ந்த மேஸ்திரி ஜமாலுதீனிடம் கடந்த ஆறு மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அஸ்கர்ஷேக் ஆதியப்பா தெருவில் கட்டிடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
மாலை கட்டிடத்தை இடித்து கொண்டிருந்த போது திடீரென ரோலிங் ஷட்டர் அஸ்கர் ஷேக் தலையில் விழுந்ததில் மண்டை உடைந்தது. இதனையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை ஜாதி ரீதியான கலவரம்:கள ஆய்வு வெளியீடு