சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம், காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ்காந்தி. இவர் பத்ரகாளி எர்த் மூவர்ஸ் என்னும் நிறுவனத்தை கடந்த பத்து வருடங்களாக நடத்திவருகிறார்.
இவர் நேற்று மாலை 06:30 மணியளவில் தனது ஜேசிபி வாகனத்தை கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று காலை ஓட்டுநர் முனி இந்திரன் சென்று பார்த்தப்போது வாகனம் நிறுத்துமிடத்தில் ஜேசிபி இயந்திரம் இல்லாததால் பயந்துபோன முனி இந்திரன் தனது உரிமையாளர் ராஜீவ்காந்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர் அம்பத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில், கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஜேசிபி திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தொடர்ச்சியாக செயலிழந்து காணப்படுவதால் ஜேசிபி எந்திரத்தை மீட்கும் பணியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பைனான்ஸ் அலுவலகத்தில் அரிவாளுடன் நுழைந்த கணவர் - வைரலாகும் வீடியோ