சென்னை ஐஐடிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சீர்மிகு கல்வி நிறுவனமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. அதன் அடிப்படையில் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் மத்திய அரசின் தீர்வு கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி உதவி அடிப்படையில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான மையங்களுக்கு அனுமதியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆராய்ச்சி துறையின் தலைவர்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “2018 ஆம் ஆண்டு மத்திய அரசு சென்னை ஐஐடியை சீர்மிகு கல்வி நிறுவனமாக தேர்வு செய்து ஆராய்ச்சி மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி வழங்கியது. அதன் அடிப்படையில் ஆராய்ச்சி மையங்களை போக்குவதற்கான திட்டங்கள் பெறப்பட்டன நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் ஐஐடிக்கு வரப்பட்டன.
அவற்றில் 21 தொழில்நுட்ப உட்பட 68 ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு திட்டமொன்றில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு துறைகளில் வல்லுனர்களை கொண்ட குழுவை அமைத்து ஆராய்ச்சி திட்டங்களை தேர்வு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் 15 மையங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் சென்னை ஐஐடி தனது ஆராய்ச்சியை செயல்படுத்தும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கட்டுமானங்களில் பொழுது கார்பன் உமிழ்வதை குறைத்தல், மின்சாசன சேமிப்பு, மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள், ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி அளிப்பதற்கான ஆர்ட்டிஃபிஷியல் கருவி உள்ளிட்ட 15 துறைகளில் ஆராய்ச்சிகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் சர்வதேச தரத்தில் இருக்கும் என தெரிவித்தார்.இந்த 15 ஆராய்ச்சிகளில் 10 ஆராய்ச்சிகள் சர்வதேச தரத்தில் அமையும் எனவும் கூறினார். இதன் மூலம் சென்னை ஐஐடி ஆராய்ச்சி சர்வதேச அளவில் பேசப்படும்.
விவசாயம் சார்ந்த துறைகளுக்கு சேர்த்து சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூச்சிக்கொல்லி போன்ற மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்வது குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பிளேன் வடிவமைப்பிற்கு மத்திய பாதுகாப்பு துறை நேற்று அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு கட்ட சோதனைகள் செய்யப்பட உள்ளன. ட்ரோன்களுக்கு சட்ட விதிகள் உருவாக்கியது போல் இதற்கும் விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் இதன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிக்க இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். அதன் பின்னரே வணிக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சென்னை ஐஐடியில் ஆராய்ச்சியின் மூலம் செயற்கை வைரம் தயாரிப்பதற்கு மத்திய அரசு 249 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடத்தப்பட்டு ஆராய்ச்சி தொடங்குவதற்கு 18 மாதங்கள் தேவைப்படும்” என்றார்.
இதையும் படிங்க: பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு:முதலமைச்சரை பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்!