ETV Bharat / state

ஐஐடி வளாகம் முன்பு சாலை மறியல் செய்த மாணவர் அமைப்பினர் கைது! - Protest opposite in IIT institute

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக நான்கு பேராசிரியர்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் ஐஐடி வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

chennai-iit-roadblock-protest
chennai-iit-roadblock-protest
author img

By

Published : Dec 12, 2019, 9:30 PM IST

கேரளாவைச் சேர்ந்த ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட நான்கு பேராசிரியர்களையும் காவல் துறையினர் பிணையில் வராதபடி வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், ஐஐடியில் தொடர்ந்து சாதி, மத ரீதியிலான மரணங்கள் நடப்பது தொடர்பாக விசாரணை நடத்த ஐஐடி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பாக சென்னை ஐஐடி வளாகம் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஐஐடி வளாகம் முன்பு சாலை மறியல் செய்த மாணவர் அமைப்பினர்

இதற்காக அங்கு வந்த போராட்டக்காரர்களை அனுமதியின்றி போராடியதற்காக காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, குண்டுக்கட்டாக கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஐடி வளாகம் முன்பு, ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை ஐஐடி வளாகத்திற்குள் வந்தவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதனை மீறி மாணவர் அமைப்பின் ஒரு பகுதியினர் ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் சர்தார் படேல் சாலையில் சென்னை ஐஐடி வளாகத்திற்கு முன்பு, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஐஐடியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி - டாக்டர்.ஸ்வராஜ் வித்வான் குற்றச்சாட்டு

Intro:Body:கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லதீப் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட 4 பேராசிரியர்களையும் ஐஐடி நிர்வாகம் பணி நீக்கம் செய்ய வேண்டும், மாணவியின் கைப்பேசி தரவுகள் தரவுகளின்படி நான்கு பேராசிரியர்களையும் காவல்துறையினர் பிணையில் வராதபடி வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், ஐஐடியில் தொடர்ந்து சாதி, மத ரீதியிலான மரணங்கள் நடப்பது தொடர்பாக விசாரணை நடத்த ஐஐடி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பாக சென்னை ஐஐடி வளாகம் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்காக அங்கு வந்தவர்களை, அனுமதியின்றி போராடியதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஐடி வளாகம் முன்பு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை ஐஐடி-குள் வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதனை மீறி மாணவர் அமைப்பின் ஒரு பகுதியினர் ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் சர்தார் பட்டேல் சாலையில் சென்னை ஐஐடி வளாகத்திற்கு முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:Complete visuals (2 parts) in mojo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.