ETV Bharat / state

சாலை விபத்துக்களை தடுக்க நவீன ஆராய்ச்சி - சென்னை ஐஐடி புது திட்டம்! - சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

சாலை பாதுகாப்பு தொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் தனியார் அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், சுமார் 2,000 ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி
சென்னை ஐஐடி ஆராய்ச்சி
author img

By

Published : Mar 9, 2023, 3:00 PM IST

சென்னை: ஐஐடியில் செயல்படும் சாலை பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையம் (CoERS) எஸ்.என்.எஸ் அறக்கட்டளையுடன் இணைந்து சாலை பாதுகாப்பில் மனித நடத்தை, திறன் மேம்பாடு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதுதொடர்பாக இருதரப்பு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஆய்வின் போது முதற்கட்டமாக பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஆனந்த் குழுமத்தின் தலைவரும், HLMAIL நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநருமான சாரதி கூறுகையில், "சாலையில் நிகழும் விபத்துக்கள், உயிரிழப்புகள் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. சாலை பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையத்துடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு, இந்தியாவில் உள்ள சாலைகளை பாதுகாப்பானதாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் பாதுகாப்பான சாலைகளை நோக்கிய பயணத்தில் நீண்ட காலம் பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். இந்த ஒத்துழைப்பின் மூலம், சிமுலேட்டர் அடிப்படையிலான பாடத் திட்டத்தை உருவாக்கி, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பதால் ஓட்டுநர்களுக்கான ஒழுக்கம், நடத்தைகளைக் கடைபிடிக்கச் செய்தல், சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையத்தின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பயன்படுத்தி கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்துதல், அதில் கண்டறியப்படும் நல்ல யோசனைகளை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.

இதுகுறித்து சென்னை ஐஐடி டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) மனு சந்தானம் கூறும்போது, "நல்ல சாலைகள் உள்ள போதும் ஆங்காங்கே சாலை விபத்துகள் நடக்கின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எத்தனையோ விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

வாகன ஓட்டிகளின் நடத்தை மற்றும் சாலைப் பாதுகாப்பு அம்சங்களில் ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. சாலைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகிறது.

கொள்கைகளை வகுப்பது உள்ளிட்ட வெவ்வேறு பணிகளை வெவ்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டும். ஓட்டுநரின் நடத்தை தொடர்பான அம்சங்கள், பாதுகாப்பான வாகன இயக்கம் குறித்து மக்களை புரிந்துணரச் செய்தல் போன்றவை குறித்து இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இறுதியில் வெவ்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பணியாற்ற வேண்டியது அவசியம். சாலை விபத்துகளே ஏற்படாது என்ற இலக்கை எட்டுவதில் உள்ள சவால்களை எடுத்துரைக்க சாலைப் பாதுகாப்புக்கான உயர் சிறப்பு மையத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: விவசாயத்திற்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குக - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.