சென்னை ஐஐடியில் உள்ள தொழில் முனைவோர் மையத்தின் மூலம் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவியை கைக்கடிகாரம்போல் கட்டினால், மனித உடலின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன் செறிவு உணர்திறன் ஆகியவற்றை அறிய உதவும். கரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் இச்சாதனத்தின் மூலம் உடல் உயிரணுக்களை தொலைவில் இருந்து தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
ட்ராக்கர் புளூடூத் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு, தொலைபேசியின் மியூஸ் ஹெல்த் ஆப்புடன் இணைக்க முடியும். இதனைப் பயன்படுத்துபவரின் உயிரணுக்கள், வெப்பநிலை, இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு அளவுகள், செயல்பாட்டுத் தரவுகள் தொலைபேசியிலும், மருத்துவர்களாலும் சேமிக்கப்படுகின்றன.
கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்களை மையப்படுத்தி கண்காணிப்பதற்கும் பயன்படுத்த முடியும்.
ஆரோக்யா சேது பயன்பாட்டிலிருந்து அறிவிப்புகளையும்; இந்த ட்ராக்கரை பயன்படுத்திப் பெறலாம். இதனைப் பயன்படுத்துபவர் கரோனா பாதிக்கப்பட்ட மண்டலத்திற்குள் நுழையும்போது, எச்சரிக்கை செய்யும். அடுத்த 20 நாள்களில் இந்த ட்ராக்கர் செயல்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... உடற்சூட்டை அறியும் தன்மையில் வெளியாகும் GOQii வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலன்!