சென்னை ஐஐடியின் அப்ளைடு மெஷின் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் வெங்கடேசன் இது குறித்து கூறும்போது, “தற்பொழுது உள்ள ஹை பர்பார்மன்ஸ் கம்ப்யூட்டர் சிஸ்டம், கிளவூட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் அதிகளவில் மைக்ரோ ப்ரோபஸ்ஸர், சிப்ஸ் பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் ஒரு கிலோ வாட் வரையில் வெப்பத்தை உருவாக்க முடியும். அதற்கு சரியான அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். சரியான தட்பவெட்பத்தை நிலையாக வைத்திருக்க திரவத்தினை பயன்படுத்தி உருவாக்குகின்றனர்.
அதற்காக மெக்கானிக்கல் பம்பு வைக்கும் போது, அதனைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும் சத்தத்தையும் ஏற்படுத்தும். இதனை சரிசெய்ய கூடுதலாக மனித சக்தியை பயன்படுத்த வேண்டியதிருக்கும். இதற்கு மாற்றாக எலக்ட்ரோ ஸ்பேஸ்டு கூலிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன கருவிகள் எதுவும் பொருத்தப்படாது. இதன் மூலம் 48 விழுக்காடு வரையில் மேம்பாட்டினை பார்த்துள்ளோம். மின்சாரத்தை கீழும், மேலும் செலுத்தி நடுவில் அதன் வெப்பத்தை தணிக்கும் முறையில் தயார் செய்துள்ளோம். மைக்ரோ ப்ரோபஸ்ஸர், சிப்ஸ் போன்றவற்றில் உருவாகும் வெப்பத்தை குறைத்து அனுப்பும். இதனால் அதிகளவில் வெப்பத்தை உருவாக்கும் எலட்ரானிக் சாதனங்களில் வெப்பம் நிலையாக இருக்கும்.
![மின்சாதனப் பொருள்களில் வெப்பத்தை குறைக்க புதிய தொழில்நுட்பம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-08-2023/tn-che-02-special-heat-transfer-electronic-script-vedio-photo-7204807_23082023140840_2308f_1692779920_1078.jpg)
விண்வெளித்துறையில் பயன்படுத்தப்படும் மைக்ரோ ப்ரோபஸ்ஸர், சிப்ஸ் போன்றவற்றில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கவும் பயன்படுத்தலாம். இதுவரையில் இஸ்ரோவிடம் பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து பேசவில்லை, தொழிற்சாலைகளில் அதிகளவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவர். அப்போது மைக்ரோ ப்ரோபஸ்ஸர் கருவிகள் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். அதனை குளிர்ச்சிப்படுத்துவதற்கு இந்த முறையை பயன்படுத்தலாம் என தற்பொழுது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளை முடித்து செயல்பாட்டிற்கு வருவதற்கு ஒராண்டாகும்” என தெரிவித்தார்.
எலக்ட்ரானிக் மைக்ரோப்ரோஸ்ஸர், சிப்ஸ் போன்றவற்றால் ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்கான எலக்ட்ரோ ஸ்பேஸ்டு கூலிங் கருவி குறித்து ஆராய்ச்சி மாணவர் விஷ்ணு கூறும்போது, “தற்பொழுதைய நவீன காலத்தில் எல்லா இடத்திலும் எல்க்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பு பயன்படுத்தியது போல் கருவிகளை பெரிய அளவில் வைத்துப் பயன்படுத்துவதில்லை. தற்பொழுது அதன் வடிவமைப்பு அளவுகள் குறைந்துள்ளது. எலக்ட்ரானிக் கருவிகளின் அளவுகள் குறைந்து வரும்போது அது வெளியிடும் வெப்பத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. மின்சாதானக் கருவிகள் வெளியிடும் வெப்பத்தை சரியான முறையில் அகற்றாவிட்டால், அந்தக் கருவி வேகமாக பழுதாகிவிடும்.
எலக்ட்ரானிக் கருவிகள் செயல்படுவதற்கு என வடிவமைக்கப்பட்ட வெப்பத்தை விட கூடுதலாக வெப்பம் அதிகரிக்கும்போது பழுதாகி விடுகிறது. அதற்கு குளிர்ச்சியை அளிப்பதற்குத் தேவையான முறையை கண்டுபிடித்து வருகின்றனர். ஏற்கனவே நம்மிடம் உள்ள திரவத்தை பயன்படுத்தி குளிர்விக்கும் முறையை பின்பற்றுகின்றனர். அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் முறையில் மின்சாரத்தை செலுத்தி குளிர்விக்கும் முறையை கண்டுபிடித்துள்ளோம். எலக்ட்ரோ குளிங் முறையில் செயல்படுத்தலாம் என்பது தான் நோக்கமாக இருந்தது.
நாங்கள் செய்த சோதனையில் 50 விழுக்காடு வெப்பத்தை குறைக்கிறது. செல்போன் போன்றவற்றில் உருவாக்கும் வெப்பத்தை சாதாரண காற்றின் மூலமே குறைக்கலாம். அதனை விட ஹைபவர் கம்ப்யூட்டர் தற்பொழுது அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதில் உருவாகும் வெப்பத்தை ஏற்கனவே உள்ளதைவிட 50 விழுக்காடு கூடுதலாக குறைக்கும். சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது வெப்பம் ஏற்படுத்தப்படுகிறது. அதனை அதிகரிக்காத வகையில் கட்டுப்படுத்த முடியும். மார்க்கெட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தி வடிவமைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சந்திரயான்-3 திட்டமிட்டபடி தரையிறங்கும்.. ஒத்திவைப்புக்கு வாய்ப்பில்லை" - இஸ்ரோ தலைவர் உறுதி!