சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி ஆகிய இரு யானைகளின் பராமரிப்பு, பாகன்கள் நியமிப்பு ஆகியவை தொடர்பாக, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளின்படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறா? என்பது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை ஆகியவை இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
2 வார அவகாசம்
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், வனத்துறை முதன்மை தலைமை வனக்காவலர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சார்பில், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வனப்பரப்பை உயர்த்துவதற்கு நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்