ETV Bharat / state

ஜெ.நினைவு இல்லம் திறக்க அனுமதி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு! - vedha house

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்க அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

veda nilayam
veda nilayam
author img

By

Published : Jan 27, 2021, 8:21 PM IST

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி சேஷசாயி, முன் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, தீபக் தரப்பு வழக்கறிஞர், போயஸ்தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவின் உடைமைகள் மட்டுமல்லாமல், தங்கள் பாட்டியின் உடைமைகளும் இருப்பதாகவும், ஜெயலலிதா பயன்படுத்திய கார்களின் நிலை பற்றி அரசு அறிவிக்கவில்லை என கூறினார். ஜெயலலிதாவின் கார்கள், பொருட்கள் பற்றி சட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ராஜாஜி, காமராஜ், அண்ணா, எம்ஜிஆர் வீடுகள் நினைவில்லமாக மாற்றியதைப் போல ஜெயலலிதாவின் வீட்டையும் மாற்ற முடிவு செய்ததாகவும், வீட்டில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவதில்லை என தெரிவித்தார்.

எந்த வகையிலும் மனுதாரர் பாதிக்கப்படவில்லை என்றும், மூன்று ஆண்டுகளாக கையகப்படுத்த நடவடிக்கையில் அனைத்து சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், வீடு மனுதாரர்களின் வசம் தற்போது இல்லை என்றும், அரசின் வசம் உள்ளதாகவும், நாளை திறந்து நினைவு இல்லமாக அறிவிக்கப் போவதாகவும் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படுகிறதே தவிர, வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, திட்டமிட்டபடி, வேதாநிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்கலாம் என அனுமதித்து உத்தரவிட்டார்.

திறப்பு விழா முடிந்த பின், வேதா நிலையத்தின் சாவியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா, தீபக் அறிவிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் முன்னிலையில் கணக்கெடுக்க வேண்டியுள்ளதால், நினைவு இல்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்த பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்க கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.