சென்னை: பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையில் பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மன்னிப்பு கோரியது.
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில், பாகப்பிரிவினை கோரி பெண் மனுதாரர் தாக்கல் செய்த மனுவின் குறுக்கு விசாரனையில், 2-வது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், தந்தை மீதான மூன்று பெண்களின் உரிமை குறித்து கேட்ட கேள்வி தாயை அவமதிக்கும் வகையில் இருந்தது.
இதுகுறித்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்திலேயே பெண்களின் தாயை அவமதிக்கும் வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்தனர்.
மேலும், மனுதாரரை அவமானப்படுத்துவதற்காகவோ, மனக்கசப்பை உண்டாக்குவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை என்று கூறிய நீதிபதிகள், தங்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: சென்னை உள்பட 7 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் - கொலீஜியம் பரிந்துரை...