உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், வைரஸின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,271ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து கோடம்பாக்கம் - 973 பேர், திரு.வி.க. நகர் - 750 பேர், தேனாம்பேட்டை - 669 பேர், வளசரவாக்கம் - 494 பேர், அண்ணா நகர் - 514 பேர், தண்டையார்பேட்டை - 528 பேர், அம்பத்தூர் - 304 பேர், அடையாறு - 334 பேர், திருவொற்றியூர் - 137 பேர், மாதவரம் - 105 பேர், மணலி - 84 பேர், பெருங்குடி - 80பேர், ஆலந்தூர் - 77 பேர், சோழிங்கநல்லூர் - 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரோனா வைரஸ் பாதித்த 1,213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!