ETV Bharat / state

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார், மனைவி கைது

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலி சாமியார், அதற்கு உடந்தையாக இருந்த அவர் மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலி சாமியார், மனைவி கைது
போலி சாமியார், மனைவி கைது
author img

By

Published : Dec 20, 2021, 6:54 PM IST

சென்னை: மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் சாமியார் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச படமெடுத்துவைத்து மிரட்டுவதாகவும் பரபரப்பு புகார் அளித்தார்.

அந்தப் பெண் அளித்த புகாரில், "நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது எனது உறவினர் ஒருவருடன் விநாயகபுரம் பகுதியில் இயங்கிவரும் ஆசிரமத்திற்குச் சென்றபோது அங்கு ஆசிரமத்தை நடத்திவந்த சத்தியநாராயணன், அவரது மனைவி புஷ்பலதா அறிமுகமாகினர். அதன்பின்னர் அடிக்கடி ஆசிரமத்திற்குச் சென்றுவந்தேன்.

2016ஆம் ஆண்டு என் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் விபூதி வாங்க ஆசிரமத்திற்குச் சென்றபோது அங்கிருந்த புஷ்பலதா என்னை வீட்டில் அமர வைத்துவிட்டு குளிர்பானம் கொண்டுவந்து கொடுத்தார்.

அதன்பின் மயக்கம் ஏற்பட்டு 2 மணி நேரத்திற்குப் பின்பு எழுந்தபோது எனக்குப் பாலியல் வன்கொடுமை நடந்தது தெரியவந்தது.

சத்தியநாராயணனிடம் கேட்டபோது, உனக்கு அதிகமாக இருந்த பாவச்சுமையைக் குறைத்துள்ளேன் எனக்கூறி என்னை ஆபாசமாக எடுத்த படங்களைக் காட்டி இதை வெளியே சொன்னால் உனக்குதான் அசிங்கம் எனக் கூறி மிரட்டினார். அதன்பின்னர் ஆசிரமம் செல்வதைத் தவிர்த்துவிட்டேன்.

போலி சாமியார், மனைவி கைது
போலி சாமியார், மனைவி கைது

காவல் நிலையத்தில் புகார்

2020ஆம் ஆண்டு எனக்குத் திருமணமாகி கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்துகொண்டு சத்தியநாராயணன் என்னை ஆசிரமத்திற்கு வருமாறு கூறினார். ஆனால் நான் வரமறுக்கவே ஏற்கனவே எடுத்துவைத்த ஆபாச படங்களை கணவருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி ஆசிரமத்திற்கு வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் கருவுற்று, கருவை கலைக்க சத்தியநாராயணனும், அவரது மனைவி புஷ்பலதாவும் என்னை மிரட்டினர்.

கைது
கைது

இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்த கணவர் திரும்பி வந்து கருவுற்ற தகவலறிந்து வீட்டில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. நான் தற்கொலைக்கு முயன்றதால் எனது கணவர் இதுபற்றி சண்டையிடாமல் இருந்துவந்தார். ஜனவரி மாதம் எனக்கு சத்தியநாராயணன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

நவம்பர் மாதம் மீண்டும் கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற நிலையில், இதையறிந்து கொண்ட சத்தியநாராயணன் என்னைத் தொடர்புகொண்டு மீண்டும் ஆசிரமத்திற்கு வருமாறு மிரட்டினார். இது குறித்து கணவரிடம் கூறி, சத்தியநாராயணன், அவர் மனைவி புஷ்பலதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலி சாமியார் கைது
போலி சாமியார் கைது

சிறையில் அடைப்பு

இந்தப் புகாரையடுத்து காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆசிரமம் நடத்திவந்த சாமியார் சத்தியநாராயணன், அவர் மனைவி புஷ்பலதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இளம்பெண் சிறுமியாக இருக்கும்போது பாலியல் வன்கொடுமை செய்ததையும், படம் எடுத்துவைத்து பெண்ணை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை அளித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

போக்சோ சட்டம், பாலியல் வன்புணர்வு தொடர்பான சட்டங்களின்கீழ் சாமியார் சத்தியநாராயணன், அவர் மனைவி புஷ்பலதா மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடித்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.