ETV Bharat / state

தவறான சிகிச்சை; இலங்கை பெண்ணுக்கு வட்டியுடன் ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு

கருப்பையில் கட்டி இருப்பதாகக் கூறி, இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை செய்து நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஜி.ஜி.மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 10:32 PM IST

சென்னை: தவறான சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு 2014ஆம் ஆண்டு முதல் 12% வட்டியுடன் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் என ஜி.ஜி.மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்சில் வசித்து வந்த ஃப்ளோரா மதியாஸகேன் என்ற இலங்கை பெண், கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஜி.ஜி.மருத்துவமனையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி, அதற்கு லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதன்பின் அடிவயிறு வலி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட ஃப்ளோரா, மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ஒப்புதலைப் பெறாமல் இரண்டாவது அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். பின், மெட் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அப்போது தான், அவரது பெருங்குடலில் சேதம் ஏற்படுத்தப்பட்ட விவகாரம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூன்று அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட ஃப்ளோரா, நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளதால், தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜி.ஜி.மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று (பிப்.11) விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், ஜி.ஜி.மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சையால் கடுமையான வலிக்கும், மனஉளைச்சலுக்கும் மட்டுமல்லாமல், நிரந்தரமாக பாதிப்புக்குள்ளான ஃப்ளோராவுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என ஜி.ஜி.மருத்துவமனைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த தொகைக்கு, வழக்கு தொடரப்பட்ட 2014ஆம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் நிகழ்ச்சி; திரையிடுவதில் சொதப்பிய தஞ்சை மாவட்ட நிர்வாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.