ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சென்னை: இ-பாஸ் ரத்து, ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட காரணங்களால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் உள்பட விமானங்களின் சேவையும் அதிகரித்துள்ளது.

author img

By

Published : Sep 3, 2020, 1:44 PM IST

passenger
passenger

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. கடந்த வாரம்வரை விமானம் வருகை, புறப்பாடு சோ்த்து 76 விமானங்கள் இயக்கப்பட்டு சுமாா் 6 ஆயிரம் போ் பயணித்தனா்.

இம்மாதம் முதல் தேதியிலிருந்து இ-பாஸ் ரத்து, ஊரடங்கில் பெருமளவு தளா்வு காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து, விமானங்களின் எண்ணிக்கையும் 87 ஆக உயா்ந்தது.

இன்று பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது, விமானங்களின் எண்ணிக்கையும் 90 ஆக உயா்ந்துள்ளது. இன்றுமுதல் சென்னையிலிருந்து கண்ணூா், வாரணாசி, லக்னோ ஆகிய இடங்களுக்கு புதிதாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் 45 விமானங்களில் பயணிக்க 4 ஆயிரத்து 400 பேரும், சென்னைக்கு வரும் 45 விமானங்களில் 6 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா். இன்று ஒரேநாளில் 10 ஆயிரத்து 400 போ் பயணிக்கின்றனா். சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகளைவிட வெளிமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, கவுகாத்தி, லக்னோ, வாரணாசி, புவனேஸ்வா், அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து அதிகமான பயணிகள் சென்னை வருகின்றனா். அவா்களில் பெரும்பான்மையோா் ஏற்கனவே தமிழ்நாட்டில் தங்கியிருந்து பல்வேறு கட்டுமானம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளா்கள், ஊரடங்கால் வேலை இழந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றவா்கள், தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கில் தளா்வுகள் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்புகின்றனா். அந்தந்த கட்டுமான நிறுவனங்களே தங்களுடைய தொழிலாளா்களை விமான டிக்கெட் எடுத்து அழைத்துவருவதாக கூறப்படுகிறது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மகிழ்ச்சியை அளித்தாலும் ஊரடங்கிற்கு முன்பு இருந்த நிலையை அடைய இன்னும் பல மாதங்களாகலாம் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மட்டும் புறப்பாடு 196 விமானங்கள், வருகை 196 விமானங்கள் மொத்தம் 392 விமானங்களில் சுமாா் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவா்கள் பயணித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.