உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அந்தந்த மாநிலங்களிலுள்ள எதிர்க்கட்சிகளும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு திமுக சார்பில் கிருமி நாசினி வழங்கப்பட்டது. இதில் ஆலந்தூர் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்துப் பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து கைகளை எவ்வாறு சுத்தமாகக் கழுவ வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தீவிரமடையும் கரோனா- தமிழ்நாடு தயார் நிலையில் உள்ளதா? பார்க்கலாம்