ETV Bharat / state

ஸ்வச் சர்வக்சன் பட்டியலில் பின்தங்கியதா சென்னை? - மாநகராட்சி விளக்கம்! - தூய்மைப் பணிகள்

Swachh Survekshan : இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னேறியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 11:34 AM IST

சென்னை: தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்வச் சர்வக்சன் விருதுக்காக ஆண்டுதோறும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு, நாடு முழுவதும் நடந்தது. இதில், திருச்சிக்கு தேசிய அளவில் 112-வது இடம் கிடைத்துள்ளது.

இருப்பினும், தமிழகத்தில் உள்ள நகரங்களுடன் ஒப்பிடுகையில், திருச்சிக்கு முதலாவது இடம் கிடைத்துள்ளது. கோவைக்கு 2-வது இடமும், தூத்துக்குடிக்கு 3-வது இடமும் வந்துள்ளது. சென்னைக்கு 5-வது இடமும் கிடைத்துள்ளது. அதாவது, இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 446 நகர உள்ளாட்சி அமைப்புகளில், பெருநகர சென்னை மாநகராட்சி 199வது இடத்தை பெற்றுள்ளது.

மேலும், 2020 முதல் 2022ஆம் ஆண்டுகளில் சென்னை 45, 43, 44 ஆகிய இடங்களில் இருந்தன. இதன் தொடர்பாக சென்னை தூய்மை இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அளித்த விளக்கத்தில், "மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் தூய்மைக்கான மதிப்பீடு நடத்தப்பட்டு, தரவரிசை வெளியிடப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தூய்மைக்கான மதிப்பீடு 2022-இல், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு தனியாக தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, அதில் மொத்தம் உள்ள 45 நகரங்களில், பெருநகர சென்னை மாநகராட்சி 44வது இடத்தை பெற்றது. அதே போன்று, நேற்றைய முன்தினம் (11.01.2024) வெளியிடப்பட்ட தூய்மைக்கான மதிப்பீடு 2023 தரவரிசை பட்டியலில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மதிப்பீடு கணக்கில் கொள்ளப்படவில்லை.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 446 நகர உள்ளாட்சி அமைப்புகளில், பெருநகர சென்னை மாநகராட்சி 199வது இடத்தை பெற்றுள்ளது. மேலும், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மொத்த மதிப்பெண்களான 7,500-இல், பெருநகர சென்னை மாநகராட்சி 2866.14 பெற்று 37.5% மதிப்பெண் பெற்றது.

ஆனால், இந்த ஆண்டு முன்னேற்றம் அடைந்து, மொத்த மதிப்பெண்களான 9,500-இல், பெருநகர சென்னை மாநகராட்சி 4313.79 பெற்று 45.4 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளது. எனவே, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் நகர உள்ளாட்சி அமைப்புகள் பெற்ற சராசரியான மதிப்பெண்கள் 2,988 மற்றும் தேசிய அளவில் உள்ளாட்சி அமைப்புகள் சராசரியாக பெற்ற மதிப்பெண்கள் 3,526. எனவே, இந்தாண்டு பெருநகர சென்னை மாநகராட்சி தமிழ்நாடு மாநில அளவிலும் மற்றும் தேசிய சராசரி அளவைக் காட்டிலும் அதிகமான மதிப்பெண்களை (4313.79) பெற்று முன்னேறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக மக்கள் அயோத்தி செல்ல அறநிலையத்துறை உதவ வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.