சர்வதேச சுங்கத்துறை தின விழா சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. சுங்கத்துறையால் மக்கள் மற்றும் பூமிக்கு நீடித்த வளர்ச்சியை வழங்குதல் என தலைப்பு இந்த ஆண்டின் மையக்கருத்தாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விழாவிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலமை வகித்து, சுங்கத்துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுங்கத்துறை சமூகத்துக்கு சிறப்பான தொண்டு ஆற்றி வருகிறது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருள்களை நாட்டுக்குள் கொண்டுவராமல் தடுக்கிறது. போதை பொருள்கள் தடுப்பிலும் அவர்களது பங்கு மிகவும் முக்கியம். வருவாயில் அரசின் முதுகெலும்பாக சுங்கத்துறை விளங்குகிறது” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை ஆணையர் எம்.எம்.பார்த்திபன் பேசுகையில், ”சென்னை சுங்கத்துறை, கடந்த ஆண்டு சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் சுங்க வரி வசூலித்து அரசிடம் வழங்கியுள்ளது. அதேபோல், இந்தாண்டும் வருவாயை ஈட்டுவோம். சென்னையில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை எந்த அளவுக்கு குறைக்க முடியும் என பார்த்து குறைத்து வருகிறோம்.
நவீன கருவிகள் மூலம் சுங்கத்துறை அலுவலர்கள் திறம்பட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் வரி சமரச ஆணைய துணைத் தலைவர் சி.பி.ராவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: