கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை தவிர வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள ஐந்து மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 4 நாள்கள் தொடர்ந்து முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுக்குக் கீழ்படிந்து பலர் வீட்டில் இருந்தாலும் சிலர் வழக்கம்போலவே வெளியே சுற்றிவருகின்றனர்.
அந்த வகையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் வெளியே சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்த காவல் துறையினர் வெளியே வரமாட்டோம் என சொல்லிக்கொண்டே அவர்களை வட்டமாக பின்னால் ஓடவைத்து நூதன தண்டனையை வழங்கினர்.
இதையும் படிங்க: இனி யாரும் காவல் துறையிடமிருந்து தப்பிக்க முடியாது... வந்துவிட்டது 'ஸ்மார்ட் காப்' செயலி