ETV Bharat / state

சென்னையில் ஒரு லட்சத்தை கடந்த கரோனா!

சென்னை: சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

chennai crossed one lakh corona positive cases said chennai corporation

author img

By

Published : Aug 2, 2020, 6:36 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று தமிழ்நாடு முழுவதும் இரண்டு லட்சத்து 51 ஆயிரத்து 738 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 887 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே மாதம் 24 ஆம் தேதி சென்னையில் கரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக் கடந்ததையடுத்து,மாநகராட்சி நிர்வாகம் கிருமிநாசினி கொண்டு சாலைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டது.

இந்தப் பரவல் குறையாததால் அடுத்த 13 நாள்களில் 20 ஆயிரத்தை கடந்தது. பரவல் அதிகரித்துக் கொண்டே சென்றதால் தமிழ்நாடு அரசு ஜூன் 5ஆம் தேதி கரோனா பணிக்காக அமைச்சர்கள் குழுவை அமைத்தது.ஒரு அமைச்சருக்கு ஐந்து மண்டலங்கள் என 15 மண்டலங்களையும் பிரித்து செயல்பட்ட தொடங்கினர்.

அப்போது மைக்ரோ லெவல் திட்டம் மூலம் மக்கள் அதிக நெருக்கமாக வாழும் பகுதிகளில் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டது.

இருப்பினும், அடுத்த ஏழு நாள்களில் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்தது. பிறகு ஜூன் 13ஆம் தேதி முதல் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று நோய் அறிகுறிகள் தொடர்பாக கணக்கெடுக்கும் மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளவும் 92 தொண்டு நிறுவனங்களை மாநகராட்சி தேர்வு செய்தது.

ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு மண்டலங்களில் தொற்று வேகமாக பரவியது. ஜூன் 15ஆம் தேதி சென்னையில் அதிக கரோனா பரவலின் விகிதம் 31.67 விழுக்காடாக இருந்தது.

கரோனா தொற்று அதிகம் பரவியதன் காரணத்தால் தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு ஜூன் 19 முதல் ஜூலை ஐந்தாம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தியது.

இருப்பினும், அடுத்த எட்டு நாள்களில் (ஜூன் 22) 30 ஆயிரத்தைக் கடந்து. நோய்த் தொற்று அதிகரித்தே சென்றதால் மாநகராட்சி சுகாதார துறை மூலம் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டது.

வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் களப்பணியாளர்கள் ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்படுவர். மேலும் இலவச முகக் கவசங்கள் கபசுரக் குடிநீர் மாநகராட்சி சார்பில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அடுத்த ஆறு நாள்களில் (ஜூன் 28) பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்தது

கரோனா தொற்று ராயபுரம், தண்டையார்பேட்டை இடங்களில் அதிகமாக பரவிய நிலையில், ஜூலை முதல் வாரத்தில் மத்திய சென்னை, அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் அதிகளவில் பரவியது.

இதனால் அடுத்த நான்கே நாள்ளில் (ஜுலை 2) பாதிப்பு 60 ஆயிரத்தைக் கடந்தது. ஒருபக்கம் நோய்த்தொற்று அதிகரித்து வந்தாலும் மறுபக்கம் குணமடைந்தவர்கள் விழுக்காடு அதிகரித்து வந்தது

அடுத்த ஐந்து நாள்களில் (ஜுலை7) 70 ஆயிரத்தைக் கடந்தது. பிறகு அடுத்த ஒன்பது (ஜுலை 16) நாள்களில் 80 ஆயிரத்தைக் கடந்து.

தொற்று குறைய ஜூன் 19 முதல் ஜூலை 5 தேதி வரை முழு ஊரடங்கு முக்கியமான காரணமாக அமைந்தது. ஜூலை 24ஆம் தேதி அடுத்த எட்டு நாள்களில் 90 ஆயிரத்தைக் கடந்தது. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அடுத்த ஒன்பது நாள்களில் ஆகஸ்ட் இரண்டாம் தேதி ஒரு லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு.

தற்போதைய நிலவரப்படி சென்னையில், ஒரு லட்சத்து 877 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 86 ஆயிரத்து 301 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 12 ஆயிரத்து 446 நபர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தத் தொற்றினால் இரண்டாயிரத்து 140 நபர்கள் இறந்துள்ளனர்.

தற்போது வரை மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்

ராயபுரம் - 11321 நபர்கள்

தண்டையார்பேட்டை - 9610 நபர்கள்

தேனாம்பேட்டை - 10892 நபர்கள்

கோடம்பாக்கம் - 11700 நபர்கள்

அண்ணா நகர் - 11565 நபர்கள்

திருவிக நகர் - 8116 நபர்கள்

அடையாறு - 7226 நபர்கள்

வளசரவாக்கம் - 5623 நபர்கள்

அம்பத்தூர் - 5956 நபர்கள்

திருவெற்றியூர் - 3698 நபர்கள்

மாதவரம் - 3383 நபர்கள்

ஆலந்தூர் - 3233 நபர்கள்

பெருங்குடி - 2990 நபர்கள்

சோளிங்கநல்லூர் - 2425 நபர்கள்

மணலி - 1761 நபர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.