தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருகிறது. நேற்று (மே 18) மட்டும் 536 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,760ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுவரை சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மண்டல வாரியாக, கரோனா பாதிக்கப்பட்டோரின் விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
மேலும், 1,622 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 56 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:கரோனா சோதனைகளை அதிகரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்!