சென்னை: தான்சானியா நாட்டைச் சேர்ந்த மார்க் ஹென்றி என்பவர் மதுரவாயல் ஜானகி நகரில் தங்கியிருந்து கொகைன் எனப்படும் போதை பொருளை சிறு சிறு பொட்டலங்களாக போட்டு நுங்கம்பாக்கம், ராமாவரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் விற்பனை செய்வதை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரியில் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து ஹென்றியிடமிருந்து கொகைன், ஹெராயின், மெத்தாகுலேன் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், போதைப் பொருளை கடத்திவந்து விற்பனை செய்த மார்க் ஹென்றி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி திருமகள் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்: மு.க.ஸ்டாலின்