ETV Bharat / state

சென்னை கரோனா பாதிப்பு விவரங்கள் - மீண்டுவா தலைநகரே

சென்னை : மண்டல வாரியான கரோனா தொற்று பாதிப்பு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மீண்டுவா தலைநகரே: சென்னை கரோனா பாதிப்பு விவரம்...!

author img

By

Published : Aug 21, 2020, 7:02 PM IST

சென்னை பெருநகரப் பகுதிகளின் மண்டல வாரியான கரோனா தொற்று பாதிப்பு நிலவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 450 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து ஆறாயிரத்து 626 நபர்கள் குணமடைந்துள்ளதாகவும், 12 ஆயிரத்து 287 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இரண்டாயிரத்து 537 நபர்கள் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 60.4 சதவிகிதம் ஆண்களும், 39.6 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். 30 முதல் 39 வயதுடைய நபர்களே கரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சிப் பகுதியில் நேற்றைய தினம் (ஆக. 20) 12 ஆயிரத்து 660 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். திருவொற்றியூர் மண்டலத்தில் மூன்றாயிரத்து 772 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 267 நபர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 124 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் மணலியில் ஆயிரத்து 798 பேர் குணமடைந்தும், 27 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இதில், 152 நபர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாதவரத்தில் மூன்றாயிரத்து 635 பேர் குணமடைந்தும், 59 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். அது மட்டுமின்றி, 626 நபர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டையில் ஒன்பதாயிரத்து 836 பேர் குணமடைந்தும், 259 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், 669 நபர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இராயபுரம் மண்டலத்தில் 11 ஆயிரத்து 590 பேர் குணமடைந்துள்ள நிலையில், 273 உயிரிழந்துள்ளனர். 749 பேர் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு வடசென்னை பகுதியில் நோய் பாதிப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது புதிய வைரஸ் தொற்றுகள் பிற மண்டலங்களில் அதிகரித்து வருகிறது. வட சென்னையில் மாதவரத்தில் மட்டும் அதிகபட்சமாக 15 விழுக்காடு நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அம்பத்தூர் மண்டலத்தில் 16 விழுக்காடு பாதிப்புகள் புதிதாக ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கத்தில் 16 விழுக்காடு, ஆலந்தூரில் 12 விழுக்காடு, அடையாறில் 13 விழுக்காடு, பெருங்குடியில் 12 விழுக்காடு, சோழிங்கநல்லூரில் 14 விழுக்காடு நபர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க...'ஓபிஎஸ்-இபிஎஸ் என்ன சொல்கிறார்களோ அதுதான் எங்களுக்கு வேதம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.