ETV Bharat / state

பொதுவெளியில் மாடுகளை விடும் உரிமையாளர் மீது வழக்கு - மாநகராட்சி எச்சரிக்கை - சென்னை மாநகராட்சி

பொதுவெளியில் மாடுகளை விடும் உரிமையாளர் மீது பிராணி வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

case will be file against owner who drops cows in public  drops cows in public  chennai corporation  chennai corporation warning  பொதுவெளியில் மாடுகளை விடும் உரிமையாளர் மீது வழக்கு  சென்னை மாநகராட்சி  மாடு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மாநகராட்சி எச்சரிக்கை
author img

By

Published : Jun 16, 2022, 9:57 AM IST

சென்னை: பொதுமக்களுக்கும். போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு தெருக்களில் சுற்றிதிரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது.

மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்து கொள்ள வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மொத்தம் 302 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலா ரூ.1,550 வீதம் ரூ.4,68,100 அபராதம் மாநகராட்சி விதித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் மாடுகளை விடும் உரிமையாளர் மீது பிராணி வதை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் உள்ளது கண்டுபிடிப்பு - சிலை கடத்தல் பிரிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.