கரோனா பாதிப்பு சென்னையில் குறைந்தாலும், மற்ற மாவட்டங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க சில மாவட்டங்களில் ஜூன் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், மாநகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்தச் சூழலில் சென்னையில் கரோனா பாதிப்பு குறித்த பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், "சென்னையில் நேற்று மட்டும் 12 ஆயிரத்து 803 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரையில் சென்னையில் 84 ஆயிரத்து 598 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 68 ஆயிரத்து 193 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என 9 லட்சத்து 41 ஆயிரத்து 893 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில், 5 லட்சத்து 68 ஆயிரத்து 235 நபர்கள் 14 நாள்கள் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். மீதமுள்ள 3 லட்சத்து 62 ஆயிரத்து 215 நபர்கள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.
மண்டல வாரியாக கரோனா பாதிப்பு விவரம்
- ராயபுரம் - 10,177 பேர்
- தண்டையார்பேட்டை - 8,644 பேர்
- தேனாம்பேட்டை - 9,329 பேர்
- கோடம்பாக்கம் - 9,560 பேர்
- அண்ணா நகர் - 9,602 பேர்
- திருவிக நகர் - 6,775 பேர்
- அடையாறு - 5,540 பேர்
- வளசரவாக்கம் - 4,163 பேர்
- அம்பத்தூர் - 4,215 பேர்
- திருவெற்றியூர் - 3,153 பேர்
- மாதவரம் - 2,649 பேர்
- ஆலந்தூர் - 2,433 பேர்
- பெருங்குடி - 2,215 பேர்
- சோளிங்கநல்லூர் - 1,871 பேர்
- மணலி - 1,544 பேர்
இதுவரை சென்னையில் கரோனா தொற்றினால் 1,407 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி முழுவதும் நேற்று ஒரேநாளில் 506 மருத்துவ முகாம்கள்!