ETV Bharat / state

சென்னையில் கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்.. மேயர் ஆர்.பிரியா ஆய்வு! - மேயர் ஆர் பிரியா

சென்னையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மாநகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சென்னை சாலைகளில் 1308 கைவிடப்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 6:12 PM IST

கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்

சென்னை மாநகராட்சி பல்வேறு வகையில் சென்னையை தூய்மைப்படுத்தும் பணிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், கோடம்பாக்கம் மண்டலம், பிராகசம் சாலையில் 3 வாகனங்களும், ஜி.என்.செட்டி சாலையில் 2 வாகனங்களும் ஒய் பாளம் அருகில் ஒரு வாகனம், மாம்பலம் பிரதான சலையில் 2 வாகனங்கள், கண்ணதாசன் தெருவில் 2 வாகனங்கள் ஆகியவற்றை காவல் துறை உதவியுடன் இன்று (செப். 9) அப்புறப்படுத்தப்பட்டன. கோடம்பாக்கம், மண்டலம் பனகல் பார்க் அருகில் உள்ள பிரகாசம் சாலையில் காவல் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளை இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் செய்தியாளரிடம் பேசியதாவது, “பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் ஆயிரத்து 308 வாகனங்கள் கண்டறியப்பட்டன. இது குறித்து ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்து. இதனைத் தொடர்ந்து 30 வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமையாளர்கள் தாமாக முன்வந்து சம்பத்தப்பட்ட வாகனத்தின் ஆவனங்களை காண்பித்து எடுத்துச் சென்றனர். செப்டம்பர் 1ஆம் தேதி எழும்பூர், மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 27 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

கோடம்பாக்கம் மண்டலத்திற்க்குட்பட்ட தி.நகர் பகுதியில் கேட்பாரற்று 16 வாகனங்கள் இருப்பது கண்டயறியப்பட்டது. இதில், 6 வாகன உரிமையாளர் தாமாக முன்வந்து தங்களது வாகனத்தை எடுத்துச் சென்றனர். மீதமுள்ள 10 வாகனங்கள் சென்னை மாநகராட்சியின் சார்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. செனாய் நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தின் அருகில் சென்னை மாநகராட்சியின் சொந்தமான அந்த இடத்தில் இந்த வாகனங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேங்கும் மழைநீர்.. வடிகால்கள் எங்கே - எதிர்வரும் பருவமழையில் இருந்து தப்புமா தலைநகர்: மாநகராட்சி அளிக்கும் விளக்கம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.