கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும், வாழ்வாதாரம், தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதன் காரணமாக பலர் பெரும் மன அழுத்தத்தில் சிக்கித் தவித்து தற்கொலைசெய்ய முயன்றுள்ளனர்.
மற்றொருபுரம், போதைப் பொருள்கள் கிடைக்காமல் சிலர் தற்கொலைக்கு முயன்றுவருகின்றனர். இதனால், இவர்களது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கின்போது வீட்டிலேயே இருப்பதாலோ அல்லது மற்ற காரணங்களாலோ மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவோருக்காக சென்னை மாநகரட்சி 044 46122300 என்ற புதிய அழைப்புதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மன அழுத்தத்தில் தவிக்கும் நபர்களுக்கு மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை வழங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடியே மருந்துகளை வாங்க கட்டணமில்லா எண் - அமைச்சர் விஜயபாஸ்கர்