சென்னை: கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் பொருட்டு, சென்னை மாநகராட்சியில் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக 60 வயது, பின்னர் 45 வயது, கடைசியாக 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.
இத்துடன் மருத்துவப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
28,16,563 தடுப்பூசிகள் செலுத்தல்
அதன்படி இதுவரை சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 20 லட்சத்து 54 ஆயிரத்து 363 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 62 ஆயிரத்து 200 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 28 லட்சத்து 16 ஆயிரத்து 563 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை
மாநகராட்சியின் சார்பில் இதுவரை 733 கர்ப்பிணிகளுக்கும், 2 ஆயிரத்து 328 பாலூட்டும் தாய்மார்களுக்கும், 143 காசநோய் பாதித்தோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், காசநோய் பாதித்தோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில், அனைத்து தடுப்பூசி மையங்களிலும் வரிசையில் காத்திருக்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் இணைய ஒப்பந்தத்தில் முறைகேடு: அறப்போர் இயக்கம் புகார்