இது குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் கோ.பிரகாஷ் கூறுகையில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்துவருகிறது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தலைநகரான சென்னையில் 768 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுகிறது” எனக் கூறினார்.
மேலும், மக்களின் பாதுகாப்பு நலன் கருதி கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் என அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மாநகராட்சியின் 4,900 தள்ளுவண்டிகள், 1152 வாகனம் மூலம் விநியோகம் செய்து வருகிறோம். மக்களுக்காக மாநகராட்சியும் கோயம்பேடு சந்தை நிர்வாகம் இணைந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கிவருகிறோம். அதுமட்டுமின்றி, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளை அதிக வேலைக்கு விற்றால் மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்தவருக்கு கரோனா!