சென்னை:இந்தியாவிலேயே பழமையான சென்னை மாநகராட்சி 334 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்கது. சென்னை மாநகராட்சியில் பெண் ஒருவர் வரும் 4ஆம் தேதி மேயராக தேர்வு செய்யப்படவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதிலும் இந்த பெருமைமிக்க மேயர் பதவியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் அமர இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகின்றது. வருகின்ற மார்ச் 2 அன்று தேர்தலில் வெற்றிபெற்ற 200 மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக ககன்தீப் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரும் மார்ச் 4 அன்று காலை 9:30 மணிக்கு மேயருக்கான மறைமுகத் தேர்தலும், பிற்பகல் 2:30 மணிக்கு துணை மேயருக்கான மறைமுகத் தேர்தலும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:இறுதி தீர்ப்பு வரும் வரை ஹிஜாப்புக்கு அனுமதி இல்லை - கர்நாடக உயர்நீதிமன்றம்