சென்னை: "கால் ஃபார் ஆக்சன்" என்ற பெயரில் தீவிர தூய்மை பணி திட்டத்தில், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார்.
மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட தெற்கு கூவம் சாலையில், தீவிர தூய்மை பணி திட்டத்தில் ஆய்வு செய்த போது தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, சாலைகளில் இருந்த குப்பைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் அப்புறப்படுத்தினார்.
இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், "சென்னை மாநகராட்சியில் இரண்டு விதமாக இடங்கள் உள்ளன, ஒன்று, ஓ.எம்.ஆர். டைட்டில் பார்க் போன்ற இடங்கள், மற்றோன்று, சென்னையின் அடித்தளம் எனப்படும் ஏழை எளிய மக்கள் வாழக் கூடியம் இடமாகும்.
நவடிக்கைக்கு செயல்படுங்கள் என்ற (Call For Action) திட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் முதல் அலுவர்கள் வரை, அனைவரும், இந்த தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ஒரு நாளைக்கு 6ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் எடுக்கப்படுகிறது. அதை சரியான முறையில் நாங்கள் கையாண்டு வருகிறோம். அதேப்போல், தூய்மை பணியாளர்கள் அனைவரும் முழு பாதுகாப்பு கவசங்களுடன், கையுறை,(Hand Gloves) போட வேண்டும் என்று அறிவுறுத்தபட்டு உள்ளது.
அதேப்போல், எழும்பூர் தெற்கு கூவம் ஆற்று சாலையில் வசிக்கும் மக்கள் பகுதியில், சரிவர கழிவறை வசதி இல்லை, அதையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மேலும், மாநகராட்சி தனி அலுவலர்களாக இல்லாமல் மொத்தம் மாநகராட்சியும், அந்த மக்களையும் இணைத்து ஒரு இயக்கமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்.
இது ஒரு விளம்பரத்துக்காக நாங்கள் செய்யவில்லை. மேலும், இப்பகுதி மக்கள் கூறியது என்னிடம் கூறியது என்னவென்றால், இரவு நேரத்தில், கார் உதிரி பாகங்கள் கழிவு, கட்டுமான கழிவுகள் என கூவம் ஆற்றில் கொட்டப்படுகிறது என்று கூறினார்கள். மேலும், இப்பகுதி மக்களுக்கு மக்கள் உரிமைத் தொகை பற்றியும், அவர்களின் குழந்தைகளின் சுகாதாரம் பற்றி எடுத்து கூறப்பட்டுள்ளது.
சாலைகளில், பழுது அடைந்த கார்களை, உரியவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடவும், அதன் பிறகு, மேலும் சாலைகளில், கார் உதிரி பாகங்கள் கழிவு மீண்டும் கடையின் உரிமையாளர்கள் செய்தால் அவர்களி மீது நடவடிக்கை எடுக்கப்படும். 15 நாட்களுக்கு மேல், ஒரு இடத்தில் வாகனம் நின்றால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கார் மெக்கானிக் செய்யும் இடங்களில், கார்கள் முறையான முறையில் நிற்க வைக்க வேண்டும். உடைந்து போன கார்களில் மழை நீரானது தேங்கினால், அதில் டெங்கு கொசு உருவாக 100% வாய்பு இருக்கிறது. அதேப்போல் கார்கள் சரியான முறையில் இல்லை என்றால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மக்களோடு தூய்மை பணியும் இணைந்தால், சென்னையை தூய்மையாக வைத்து இருக்க முடியும். மேலும், தூய்மை பணியில், குப்பைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் தனியாக நோடல் அலுவலர்களையும் நியமித்து இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 1989ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்தது இதுதான்... - உண்மையை உடைத்த மூத்த பத்திரிகையாளர்!