சென்னையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக நிறுவனங்களும், கடைகளும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தியாகராய நகர் பகுதியிலுள்ள வணிகர்களை நேரில் சந்தித்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடைகளை விரைவில் அடைக்குமாறு வலியுறுத்தினர்.
பின்னர், மாநகராட்சியின் பூச்சித் தடுப்புத் துறையினர் தியாகராய நகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அடைக்கப்பட்டுள்ள கடைவீதிகள் ஆகிய இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.
இந்தப் பணியில், விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ரக்க்ஷாக்- 400 (Rakshak- 400) என்ற இயந்திரத்தினை ஊழியர்கள் பயன்படுத்தினர். Butterfly sprayer முறையில் இயங்கும் இந்த இயந்திரம் 8 மீட்டர் தூரம் வரை, கிருமிநாசினி மருந்தினை தெளிக்க உதவுகிறது.
இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்குப் பயன்படும் இந்தவகை தொழில்நுட்பத்தை, சுகாதாரத்தைப் பேணுவதற்காக சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வருவதாக அரசு அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு