ETV Bharat / state

இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை - பெருநகர சென்னை மாநகராட்சி

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெரு உள்பட 9 அங்காடிகள் இன்று முதல் (ஜூலை.31) செயல்பட அனுமதி இல்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை
இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை
author img

By

Published : Jul 31, 2021, 11:37 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் இன்று முதல் (ஜூலை.31) செயல்பட அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் அங்காடிகள்
பொதுமக்கள் அதிகம் கூடும் அங்காடிகள்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர், காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நேற்று (ஜூலை.30) நடைபெற்றது.

பொதுமக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெரு
பொதுமக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெரு

இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள.

  • ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை
  • புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை
  • ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை
  • ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை
  • குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை
  • இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை
  • வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை
  • அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை
  • அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை
  • ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள், அங்காடிகள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

மேலும், கொத்தவால் சாவடி மார்கெட் நாளை (ஆகஸ்ட்.1) முதல், (ஆகஸ்ட் 9) காலை 6மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்காடிகள்
அங்காடிகள்

எனவே, வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைபடுத்த மாநகராட்சி, காவல் துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி

மேலும், பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நடைமுறைகளின்படி பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா’ - மக்கள் இயக்குநர் மணிவண்ணனை நினைவுகூறுவோம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.