சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் இணைப்பு மாநகராட்சியிடமும் கழிவு நீர் இணைப்பு மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடமும் உள்ளன. சில குடியிருப்புகளில் செப்டிக் டேங்க் உள்ளிட்ட கழிவு நீரை மழைநீர் வடிகாலுடன் இணைத்து விடுகின்றனர். இதனால் மழை நீர் வடிகால்வாய் பாதைகளில் தேவையற்ற அடைப்பு ஏற்படுவதோடு, வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதற்கும் வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. மேலும் வடிகால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் சிக்கலானதாக மாறிவிடுகிறது. மேலும் இந்த கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கலப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மாறாக முறையாக கழிவு நீர் கால்வாய்களில் இணைப்பதால் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக திட்டமிடப்பட்ட பணிகளுக்கு அனுப்பப்படும்.
அபராதம்..! எச்சரிக்கை: கோடையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள சென்னை மாநகராட்சி, முறைகேடாக மழைநீர் வடிகால்வாய்களில் இணைக்கப்பட்டுள்ள கழிவு நீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. சாதாரண கட்டிடங்கள், சிறப்பு கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வகைகளாக பிரிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 2 லட்ச ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது.
-
Illegal sewer line plugged at Kasturibai Street, Adyar. pic.twitter.com/0MI9OSGB0L
— Greater Chennai Corporation (@chennaicorp) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Illegal sewer line plugged at Kasturibai Street, Adyar. pic.twitter.com/0MI9OSGB0L
— Greater Chennai Corporation (@chennaicorp) May 3, 2022Illegal sewer line plugged at Kasturibai Street, Adyar. pic.twitter.com/0MI9OSGB0L
— Greater Chennai Corporation (@chennaicorp) May 3, 2022
முறையான இணைப்பை பெறுங்கள்: ஏற்கெனவே மழை நீர் வடிகாலில் கழிவு நீர் இணைப்பு கொடுத்திருப்பவர்கள் முறையான இணைப்பு பெற விரும்பினால், மாநகராட்சியை அணுகி முறையான விண்ணப்பம் மற்றும் கட்டணம் வழங்கி கழிவு நீர் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அபராதம் செலுத்த நேரிடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அவர்கள் வசிக்கும் பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை எனில். கட்டடத்தில் முறையான கழிவு நீர்த் தொட்டி (செப்டிக் டேங்க்) நிறுவப்பட வேண்டும்.
கழிவு நீர் இணைப்பு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறும் மாநகராட்சி அதிகாரிகள், இதிலும் ஏழை எளிய மக்களுக்கு கனிவு காட்டுவதாக கூறுகின்றனர். ஓரளவுக்கு நினைத்தால் இணைப்பு பெறும் நிலையில் வசதி படைத்த மக்களை அணுகி புரிய வைத்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் கடுமையான நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு, முக்கிய பிரமுகர்களால் இடையூறு உள்ளதா என்பது குறித்த தகவலை மாநகராட்சி அதிகாரிகளிடம் பெற முயற்சித்தோம். வார்டு கமிட்டி சந்திப்புகள், மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்களில் கழிவு நீர் அகற்றுதலில் உள்ள பாதிப்புகளை முழுமையாக எடுத்துக்கூறுகிறோம் என்றனர்.
அதே நேரத்தில் மக்கள் படும் சிரமங்களுக்கும் செவிகொடுத்தே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் மாநகராட்சி உறுதியளித்துள்ளது. சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் இணைந்த பகுதிகள், கிராமமாக இருந்த பகுதிகளை சற்று நிதானமாகவே மாநகராட்சி கையாளுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விதிமீறல்களில் அதிரடியும், இயலாதவர்களிடம் அனுசரணையும் காட்டி வருவதாக அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.
எனினும் சுற்றுச்சூழல் மற்றும் மழை வெள்ள முன்னெச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு மக்கள் தாங்களாகவே கழிவுநீர் இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கொசு ஒழிப்பதற்கு சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன - துணைமேயர் என்ன சொல்கிறார் தெரியுமா?